top of page

இசை குறிப்புகள்

ரெண்டு பக்கங்களுக்குள் இசை சம்பந்தமாக எழுதி முடிப்பது என்பது பிரயாசைதான் ; என்றாலும் முயற்சி செய்வோமே . “ ஒருவாய் , ரெண்டு காதுகள் ஏன் ? " என்று கேட்பவர்க்கு , நிறைய்யக் கேள் ; குறைய்யப் பேசு என்று பெரியவர்களிடமிருந்து பதில் வரும் . ஆனாலும் நம்முடைய வாய் திறப்பதற்கு முன்னாலேயே காதுகளை படைச்சவன் திறந்து வைத்து விடுகிறானாம் . ஒவ்வொரு விசயங்களுக்கும் மனுசன் கதைகளை உண்டு பண்ணிக் கொண்டே இருப்பவன் ; “ வாழை பெருத்த ஊரில் வச்சி வைப்பானா ? " என்பது ஒரு கதைப்பகுதி , ஒரு சின்னப் பேச்சின் அசைவைக்கூட மனுசப்பயல் கவனிக்கத் தவறமாட்டான் என்கிறது . சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அருச்சுனனின் மகனுக்கு , ஏன் வெளியே வர முடியவில்லை என்கிற கேள்விக்குப் பதிலாகப் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது கதையில் அங்கே ! " பிறவி இசை ஞானம் " என்பது பொய் அல்ல . அது அனைவருக்கும் வாய்ப்பதும் இல்லை.சங்கீத நினைவலைகள் 261 சுருதி சுத்தமான இசையை ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றுக்குள் இருந்தே கேட்டு வளர்கிறது . எத்தனை குழந்தைகளுக்கு இது சாத்தியம் ? பயிர் பச்சைகளைப் பேணி வளர்த்துப் பாதுகாத்து உலகத்துக்குச் சோறிடும் தருமம் , பசை வேளாளர்களாலேயே தரமுடிவது போல , சுருதி சுத்தமான இசையைப் பேணிப் பாதுகாத்து உலகத்துக்கு தரும் தருமம் இசை வேளாளர்களுக்கு மட்டும் சாத்தியம் . மற்றப் பாடகர்களுக்குச் சாத்தியப்படுவதெல்லாம் ஒரு வயசு வரைக்குத்தான் . அதன் பிறகு அவர்களே திடுக்கிடும் அளவுக்குச் சுருதி காணாமல் போய் விடுவதைப் பார்க்கிறோம் . குரல் சுருதியோடு சேர்ந்து பிரவகித்து வரும்போது முகம் ஆனந்தமாக அல்லவா இருக்கணும் , ஏன் கோணுகிறது இவர்களுக்கு ! அபூர்வ சுரங்கள் இவர்களுக்கு வலிப்புக் காட்டுகிறதா ; இவர்கள் வலிப்புக் காட்டுகிறார்களா ; தெரியவில்லையே . வடநாட்டு இசைப் பயிற்சியின்போது அங்கே அவர்கள் மூன்று ஆண்டுகள் , சுருதியோடு சேர்ந்து பாடுவதற்குப் பயிற்சி தருகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . அப்படியிருந்தும் சிலருக்கு சுருதி அவ்வளவு லேசில் பிடுபடுவதில்லை . வலது பக்கம் ஒரு தம்புரா , இடதுப்பக்கம் ஒன்று , பின்பக்கம் ஒன்று என்று பல தம்புராக்கள் ஏக காலத்தில் முழங்கும் , எதுக்கு ? சுருதி விலகும் போது தெரியாமல் இருக்கத்தானோ ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் , நம்மை அப்படியே ஆழ்த்தி புதைத்துவிடுவார்கள் , அந்தச் கருதிக்குள் . முன்பெல்லாம் நம்முடைய தாத்தா காலத்தில் இங்கேயும் கர்நாடக இசையில் சவுக்கமாக பாடுகிறது என்று இருந்தது . "உணவு " இல்லாத காலம் அது . ரயிலுக்கு எந்தவித அவசரமும் இல்லை . ஒரு சிறிய்ய விள்ளல் அசோகம் எடுத்து நாக்கில் வைத்தால் , அது கரைந்து கரைந்து நாவெல்லாம் பரவி , இவ்வளவுதானா உன் நாக்கின் அகலம் என்று கேட்கும் ; இங்கே சுருதி உமிழ்நீர்தான் . வாக மேலே , மேலே கொண்டுபோகும் உங்களை ... சவுக்க காலத்தில் கேட்டும் , பாடியும் பழகிவிட்டால் சொர்க்கத்தைத் தொட்டுவிடலாம் . அவசர உலகத்தில் “ ஒண்ணுக்குக் ” கூட அனுபவித்து இருக்க முடியாது . பெரியவர்கள் எது எப்படி அமைந்திருக்க வேணும் என்று சொல்லியிருக்கிறார்கள் . நெல் நாற்றுகளுக்கு இடையில் நண்டு ஊர்ந்து போகும் படியான இடைவெளி இருக்கவேண்டுமாம் . தென்னந்தோப்பில் இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு தேர் புகுந்து போகும்படியாக இடைவெளி இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஒரு நாட்டார் பாடலில் , ஆனால் விவரம் தெரிந்த மனிதன் தவிலுக்கும் நாயனத்துக்கும் ஒலி பெருக்கி வைத்துக்கொண்டிருக்கிறான் . தூரத்திலிருந்து கேட்கும் நாயனத்தின் ஒலி சொக்கவைக்கும் என்றாலும் இவன் கேட்கத் தயாரில்லை இப்போது . மிருதங்கத்துக்கு மைக் வேண்டாமே என்று சொல்லிப் பார்த்தார் பாலக்காட்டு மணி அவர்கள் , வீணை தனம்மாள் அவர்களோ , பிற்காலத்தில் மிருதங்கமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம் * மேன்மை - ஏப்ரல் 2016454 views

Comments


bottom of page