top of page
article_image_15.jpg

இன்று சில வரிகள் 

இன்று சில வரிகள் பகுதியில், தினமும் கி.ராவின் படைப்பிலிருந்து ஒரு சிறு பகுதியோ, ஒரு பக்கமோ பதிவேற்றம் செய்யப்படும். ஒரு நாளை தொடங்குவதற்கு ஒளி மிகுந்த சில வரிகள் தேவைதானே?

Flying Bird

எப்பவும் நினைவில் கொள்ளும்படியான ஒரு வரியைச் சொல்லும்படி கேட்டாள் அண்டரண்டத்திடம்.

 

“அதனால் யாருக்கு என்ன பயன்; அதைக்கேட்டு யார் நடந்தார்கள்? பெரியவர்கள், மதபோதகர்கள், அனுபவஸ்தர்கள் பாடிப்பாடிச் சொன்னதைக் கேட்டு யார் நடந்தார்கள்?”

 

“உண்மைதான் உண்மைதான், நான் கேட்டது நடப்பதற்கல்ல. கேட்டுவைத்துக் கொள்ள”.

 

சிரிப்புதான் வந்தது பட்சிக்கு. 

 

“இந்தா, முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்” என்று சொன்னது.

 

“பறவைகளைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள்”

 

கேட்டதை மனசுக்குள் சொல்லிப்பார்த்தாள். எங்கோ கேட்டதைப்போலத் தெரிகிறதே!

 

“…அவைகள் உண்ணும் தானியத்தைச் சேர்த்து வைப்பதும் இல்லை, செலவழிப்பதும் இல்லை”

 

- அண்டரெண்டப்பட்சி கையெழுத்துப் பிரதியிலிருந்து.

bottom of page